Press "Enter" to skip to content

கசிப்பு குடிப்பதற்கு 100 ரூபாய் கேட்ட நபர்..! கொடுக்க மறுத்ததால் இளம் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த குரூரம்..

100 ரூபாய் பணம் கேட்டு கொடுக்க மறுத்ததால் 27 வயதான பெண் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் இரத்தினபுரி – மஹிரகல பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது.

மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,

இவருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. பலியானவர் 27 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் கெஹலோவிடகம பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் 21 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எலபாத பிரதேசத்தில் வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும் வழியில் குறித்த பெண் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட பெண்ணும் இவரது கணவரும் ஒரே இடத்தில் பணிபுரிந்து வந்ததாகவும் சம்பவ தினத்தன்று கணவர் வேலைக்குச் செல்லவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

கொலை நடந்த அன்று பிற்பகல் சந்தேகநபர் கொலை செய்யப்பட்ட பெண்ணின் வீட்டில் இருந்து சுமார் 500 மீற்றர் தொலைவில் உள்ள வீதியொன்றில் வைத்து அவரிடம் 100 ரூபா பணம் கேட்டுள்ளார்.

குறித்த பெண் கொடுக்க மறுத்ததையடுத்து அவரை மூன்று இடங்களில் கத்தியால் குத்தியதாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பின்னர் சந்தேகநபர் அந்த பெண்ணின் கையில் இருந்த சாமான்களை எடுத்துக்கொண்டு தப்பியோடியுள்ளார்.

சந்தேகநபர் பொலிஸாரினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டபோது, ​​கசிப்புக்கு அடிமையானதாகவும், கசிப்பு குடிக்க பணம் கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று இரத்தினபுரி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எலபாத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *