இந்திய கடன் வசதியின் மூலம், தனிநபர் ஒருவருக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மிளகாய் ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
தங்களுக்காக ஒதுக்கப்பட்ட 500 மில்லியன் டொலரில் தனிப்பட்ட நபர் ஒருவருக்கு, 10 சதவீதத்தை வழங்கியமையானது.
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஒன்றாகும் எனத் தாம் கருதுவதாக அந்த சங்கத்தின் செயலாளர் கே.இளமைநாதன் தெரிவித்துள்ளார்.
தங்களது வியாபார சங்கத்தில் சுமார் 400 வர்த்தகர்கள் இதற்காக விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில், தங்களது வியாபார சங்கங்களில் இல்லாத நாரஹேன்பிட்டியை சேர்ந்த ஒருவருக்கு, இதனை வழங்கியதன் மூலம், வர்த்தகர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்கமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் கே.இளமைநாதன் தெரிவித்துள்ளார்
Be First to Comment