யாழ்.வட்டுக்கோட்டை – பொன்னாலை இடையிலுள்ள வீதியில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவரை கத்தி முனையில் அச்சுறுத்தி மோட்டார் சைக்கிள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டிருக்கின்றது.
குறித்த சம்பவம் நேற்றய தினம் இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, பொன்னாலை பொன்னொளிநகர் பகுதியில் வசித்து வரும் கனகையா செல்வம் (வயது 58)
என்ற நபர் தனது மனைவியுடன் பொன்னாலை பொன்னொளி கிராமத்தில் வசித்து வரும் நிலையில் யாழ்.நகரிலுள்ள்ள தனது மகளுடைய வீட்டிற்கு நேற்று காலை சென்றுவிட்டு, இரவு 7 மணியளவில் வீடு திரும்பியுள்ளார் .
இந்நிலையில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தை தாண்டி பொன்னாலை நோக்கி பயணித்த நிலையில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நால்வர் அடங்கிய குழு
குறித்த நபரை வழிமறித்து கத்திமனையில் அச்சுறுத்தி, NP BER 3736 இலக்கத்தகட்டினையுடைய மோட்டார் வாகனத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட நபர் இதுகுறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் மோட்டார் வாகனத்தில் 7 ஆயிரம் ரூபாய் பணமும்
மோட்டார் சைக்கிளில் ஆவணங்கள் இருந்ததாக முதியவர் தனது வாக்குமூலத்தில் பதிவு செய்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டது இதனை அடுத்து வட்டுக்கோட்டை பொலிசார் தீவிர தேடுதல் நடவடிக்கை நடத்தினர்.
Be First to Comment