களுத்துறை பாணந்துறை பிரதேசத்தில் எரிவாயு வரிசையில் காத்திருந்த நபரொருவர் ஆற்றில் தவறி விழுந்து காணமால் பேர்யுள்ளார் என்று பாணந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாணந்துறை கங்கையில் முகம் கழுவுவதற்காக சென்ற நபரே கங்கையில் விழுந்து காணாமல் போயுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் நீண்டநேரம் எரிவாயு வரிசையில் காத்திருந்துள்ளார் என்றும் இந்நிலையில் இன்று காலை குறித்த கங்கையில் முகம் கழுவுவதற்காக சென்றபோதே அவர் தவறி விழுந்து காணாமல் போயுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
பாணந்துறை உயிர்காக்கும் பிரிவினர் இணைந்து குறித்த நபரை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Be First to Comment