யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் 321 கிலோ கஞ்சா பொலிசார் மற்றும் விசேடதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
வேலணை மண்கும்பான் பகுதியில் 141 கிலோ கஞ்சா விசேட அதிரடிப்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளது.
மண்கும்பானில் உள்ள ஓர் வீட்டில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே அதிரடிப்படையினர் சுற்றிவளைத்து பிடித்துள்ளனர்.
இதன்போது 4 மூடைகளில் 141 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதோடு அதனை உடமையில் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேநேரம் கிளிநொச்சி ஊடாக வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட 180 கிலோ கஞ்சாவை கிளிநொச்சி பொலிசார் மீட்டுள்ளனர்.
காரில் ஏற்றி கொண்டு செல்ஙதானா தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இந்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளதோடு சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவற்றின் அடிப்படையில் நேற்று ஒரே நாளில் 321 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.





Be First to Comment