வங்கி முகாமையாளரான பெண் மீது முகத்தை மறைத்தபடி வந்த நபர் ஒருவர் சரமாரியான கத்திக்குத்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.
பிபில – ஹெவல்வெல பகுதியில் குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
முகத்தை முழுமையாக மறைத்திருந்த இனந்தெரியாத நபர் ஒருவர் குறித்த பெண் மீது கத்திக்குத்தை மேற்கொண்ட நிலையில்,
கத்தியுடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பில் பிபில பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
Be First to Comment