வீட்டின் பின்னால் பாரிய கொள்கலன்களில் மறைத்துவைக்கப்பட்டிருந்த சுமார் 1700 லீற்றர் டீசல் விசேட அதிரடிப்படையினால் மீட்கப்ட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் மித்தெனய பகுதியில் இடம்பெற்றுள்ளது. விசேட அதிரடிப்படைக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வீடொன்று முற்றுகையிடப்பட்ட நிலையிலேயெ டீசல் மீட்கப்பட்டுள்ளது.
மித்தெனிய பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. சம்பவம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை குறித்த நபர் டீசலை பதுக்கிவைத்திருந்தது மட்டுமல்லாமல் அதிக விலைக்கு விற்பனை செய்தமையு் குறிப்பிடத்தக்கது.
Be First to Comment