காதலி தொடர்புகளை துண்டித்ததால் கோபமடைந்த காதலன் காதலியின் வீட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளார்.
அனுராதபுரத்தில் நேற்றுமுன்தினம் 3ம் திகதி இரவு 10 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.
சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,
காதலன் தனது காரை ஓட்டிச் சென்று காதலியின் வீட்டின் கேட்டை உடைத்து அதன் பின்னர் அங்கிருந்தவர்களை குழு ஒன்றுடன் இணைந்து தாக்க முயற்சித்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
காதலன் தனது காதலியின் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காரையும் தனது காரை கொண்டு பலமுறை கடுமையாக மோதி சேதப்படுத்தியுள்ளார்.
அவர் தனது பெற்றோர் மீது கார் ஏற்றி கொலை செய்ய முயன்றதாக காதலி பொலிஸில் குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவத்தால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் முன், இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணுமாறு பொலிஸாரிடம் குறித்த பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.
அனுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Be First to Comment