நாளை (06) முழுமையாக பஸ்கள் சேவையில் ஈடுபடாத பல பகுதிகள் தொடர்பில் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்தல் விடுத்துள்ளது.
தென் மாகாணம், கம்பஹா மாவட்டம், மன்னார், வவுனியா, கேகாலை, மாவனல்லை, பொலன்னறுவை, பதுளை மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் முழுமையாக பஸ்கள் சேவையில் ஈடுபடாது என அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதிகளின் டிப்போக்கள் ஊடாக டீசல் விநியோகம் செய்யப்படாத காரணத்தால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Be First to Comment