பங்களாதேஷில் கொள்கலன் கிடங்கில் ஏற்பட்ட தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளதாகவும் 170 பேருக்குக் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிடங்கில் நேற்றிரவு தீ ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்த அருகில் உள்ள பல கொள்கலன்கள் வெடித்ததாகக் கூறப்பட்டது.
இச்சம்பவத்தில் தீயணைப்பாளர்கள் உட்பட 34 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த பலர் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் கூறினர்
தீயை அணைக்கும் முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இரசாயன கசிவினால் தீ ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு அதிகாரிகள் நம்புகின்றனர்.
Be First to Comment