இலங்கை – ரஷ்யாவுக்கு இடையிலான உறவை பாதுகாக்குமாறும் அதை உறுதிப்படுத்துமாறும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிளவர் வீதியில் அமைந்துள்ள பிரதமரின் அலுவலகத்திற்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் கல்வி கற்ற இலங்கையர்கள் மற்றும் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய சிலர் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
ரஷ்யாவின் ‘ஏரோபுளோட் ‘ விமானம் ஒன்றினை இலங்கையில் இருந்து வெளியேற தடை விதித்து, கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Be First to Comment