நாடு தேர்தலை நடத்தும் நிலையில் இல்லை. அரசமைப்பின் 21ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும். ஆனால், அது எந்த தேர்தலுக்கும் அழைப்பு விடுக்காது” – என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், “நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது தொடர்பில் பொதுஜன வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்கப்படும். எனினும் அது தற்போது சாத்தியமற்றது.” -என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவின் என். டி. ரீ. வி. தொலைக்காட்சி சேவைக்கு வழங்கிய நேர்காணலிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும், “இலங்கையின் பிரதான ஆதரவாளராக இந்தியா இருக்கின்றது. தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இலங்கைக்கு உதவுவதற்கு ஏனைய நாடுகள் முன்வந்துள்ள போதிலும், இந்தியா ஏற்கனவே இலங்கைக்காக பலவற்றை செய்துள்ளது. எனினும், நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடிக்கு அயல் நாடான இந்தியாவின் ஆதரவை எதிர்பார்க்கிறது.
“சிறீ லங்கன் விமான சேவை நட்டத்தில் உள்ளது. நாடு பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள வேளையில் அதற்கு மேலதிக உதவிகளை வழங்க முடியாது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அல்லது ராஜபக்ஷ குடும்பத்தினர்மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அது தொடர்பில் பின்பற்றப்படும் நடைமுறை என்ன? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிரதமர், “அவர்கள் சட்டத்தை மீறியிருந்தால் அவர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இது ராஜபக்ஷக்களுக்கு மாத்திரம் அல்ல. எவருக்கும் பொருந்தும். சட்டத்தை மீறும் எந்தவொரு தரப்பினரும் தண்டிக்கப்படுவார்கள். விசாரணை அமைப்புகளால் விசாரணை மேற்கொள்ளப்படும்” என்று பதிலளித்தார்.
“நாடு தேர்தலை நடத்தும் நிலையில் இல்லை. அரசியலமைப்பின் 21வது திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும். ஆனால், அது எந்த தேர்தலுக்கும் அழைப்பு விடுக்காது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது தொடர்பில் பொதுஜன வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்கப்படும். எனினும் அது தற்போது சாத்தியமற்றது. தேர்தலை நடத்துவதற்கு முன்னர் நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியது அரசின் பொறுப்பாகும்”- என்றார்.
Be First to Comment