Press "Enter" to skip to content

புங்குடுதீவில் ஆயுர்வேத வைத்தியசாலை திறந்துவைப்பு – ஆயுர்வேத மருத்துவத்தை எதிர்பார்ப்பவர்களின் அபிலாசைகளை நிவர்த்தி செய்யும் என நம்புவதாக தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி தெரிவிப்பு!

வேலணை புங்குடுதீவு பிரதேசத்தில் ஆயுர்வேத வைத்தியசாலை ஒன்று அமைக்கப்பட்டு இன்றையதினம் திறந்துவைக்கப்பட்டது.-

வேலணை பிரதேச சபையின் தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி தலைமையில் இன்று முற்பகல் 11 மணியளவில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

பிரதேச அபிவிருத்தி உதவி திட்டத்தினூடாக சுமார் 16 இலட்சம் நிதி வழங்கப்பட்டிருந்த நிலையில் குறித்த திட்டம் நடைறைப்படுத்தப்பட்டு இன்றையதினம்  சம்பிரதாய பூர்வதாக தவிசாளர் நமசிவாயம் கருணாகரகுருமூர்தியால் மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

இதன்போது தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி கருத்துரைக்கையில் –

தற்போதைய நாட்டு சூழலும் பொருளாதார நெருக்கடியும் மக்களை பெரிதும் பாதித்துள்ளது. இதில் மருத்துவம் சார் தேவைகளும் அதிகரித்துள்ளமையால் மக்கள் பெரும் பாதிப்புகளை நாளாந்தம் எதிர்கொண்டு வரும் நிலை காணப்படுகின்றது.

இந்நிலையில் எமது பிரதேச சபையின் ஆளுகைக்கு குட்பட்ட பகுதியான புங்குடுதிவில் குறித்த வைத்தியசாலையை அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவந்த நிலையில் அதற்காக உள்ளூராட்சி மன்றங்களின் பிரதேச அபிவிருத்தி உதவி திட்டத்தினூடாக 16 இலட்சம் ரூபா நிதி இதற்காக ஒதுக்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் இன்றையதினம் (06.06.2022) இந்த ஆயுர்வேத வைத்தியசாலை இப்பகுதி மக்களின் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் ஆயுர்வேத மருத்துவத்தை அதிகளவில் எதிர்பார்க்கும் முதியோரின் அபிலாசைகளை நிவர்த்தி செய்யும் வகையிலும் ஏனையவர்களின் நலன்களை முன்னிறுத்தியும் இந்த வைத்தியசாலை அமைக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் புங்குடுதீவு பகுதியானது பரந்தளவிலான பகுதியாகவும் பல கிராமங்களை உள்ளடக்கியதாகவும் இருக்கும் நிலையில் சில பகுதிகளில் இருந்து மக்கள் தமது மருத்துவ தேவையை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு சென்று பெற்றுக்கொள்ளும் நிலையும் குறைவாகவே காணப்படுகின்றது.

இதனால் மாதாந்தம் 15 நாட்களுக்கு ஒருதடவை நடமாடும் சேவையை பிரதேசத்தில் உள்ள கிராமங்களில் மக்கள் நலன்பெறும் வகையில் முன்னெடுக்க வேண்டும் எனவும் தவிசாளரால் வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் வேலணை பிரதேச சபையின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பிரதேச சபையின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *