புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டு ஒரு மாதமாகின்ற போதிலும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (6) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டு ஒரு மாதமாகின்றது. புதிய பிரதமரின் வருகையுடன் தமது பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். எனினும் அத்;தகைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கான குறைந்தபட்ச வேலைத்திட்டங்களோ, கொள்கைகளோ அல்லது மக்கள் சார்ந்த ஏதேனும் தீர்வுகளோ முன்வைக்கப்படவில்லை என்பதையே கூற வேண்டும்.
Be First to Comment