Press "Enter" to skip to content

ஒரு பணிஸ் 100 ரூபாய்க்கு வாங்கும் நிலை உருவாகப்போகிறது..! பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை

பேக்கரி உரிமையாளர்களும் 12 சதவீதம் வற் வரியை செலுத்தவேண்டியுள்ளதால் எதிர்காலத்தில் ஒரு பணி 100 ரூபாய்க்கு வாங்கும் நிலை உருவாகும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

உரிய வற் வரியை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் பனிஸ் ஒன்றின் விலையை 100 ரூபாவாக அதிகரிக்க நேரிடும் என அவர் கூறுகிறார்.சிறு பேக்கரி உரிமையாளர்களுக்கு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டாலும், அனைத்து பேக்கரி உரிமையாளர்களில் 60 சதவீதத்தினர் உரிய வரியைச் செலுத்த வேண்டும் என்றார்.

மேலும், பேக்கரி உரிமையாளர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வற் வரியில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எழுத்து மூலம் அறிவிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பேக்கரி தயாரிப்புகளுக்கு மேலதிகமாக, பேக்கரி உரிமையாளர்கள் மார்ஜரின் மற்றும் பால் பவுடர் போன்ற மூலப்பொருட்களுக்கு 12 சதவீத VAT செலுத்துகின்றனர். எனவே பேக்கரி பொருட்களுக்கு வற் வரியை நீக்கி நிவாரணம் வழங்க வேண்டுமென பேக்கரி உரிமையாளர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதேவேளை பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக சுமார் 2000 சிறிய அளவிலான பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *