அக்கரபத்தனையில் விறகு தேடச் சென்றிருந்த நிலையில் கடந்த 6 நாட்களாக காணாமல் போயிருந்த இரண்டு யுவதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்
குறித்த இருவரும் கொழும்பில் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கடந்த 2ஆம் திகதி காலை 11 மணியளவில் வீட்டில் இருந்து விறகு சேர்க்க சென்றவர்கள் மீண்டும் வீடு திரும்பாதமையால் அக்கரப்பத்தனை காவல்துறையில் முறைப்பாடு அளிக்கப்பட்டது.
காணாமல் போனவர்கள் அக்கரப்பத்தனை சென்மார்கட் தோட்டத்தில் வசிக்கும் 15 மற்றும் 18 வயதுகளையுடைய யுவதிகளாவர்.
இந்நிலையில் குறித்த இருவரும் கொழும்பில் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
Be First to Comment