இரண்டு ஹெக்டேயருக்கு குறைவான நிலப்பரப்பை கொண்ட நெற்செய்கையாளர்கள் பெற்றுள்ள கடன் தொகையை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
விவசாயிகளின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தியாவசிய அரச சேவைகளைத் தடைகளின்றி தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கான நிதியைப் பெற்றுக்கொள்வதற்கு பிரதமர் குறைநிரப்பு பிரேரணை ஒன்றை நாடாளுமன்றில் இன்று முற்பகல் முன்வைத்திருந்தார்.
695 பில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணையை இவ்வாறு பிரதமர் முன்வைத்திருந்தார்.
Be First to Comment