Press "Enter" to skip to content

சிறு, நடுத்தர மற்றும் கட்டட நிர்மாணத்துறைகள் பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளன – எதிர்க் கட்சித் தலைவர்

சிறு, நடுத்தர மற்றும் கட்டட நிர்மாணத்துறைகள் கொவிட் தொற்று பரவலுடன் வீழ்ச்சிக்கண்டிருந்த நிலையில், அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக அந்தத் துறைகளை சேர்ந்தோரால் மீள எழமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் நாம் கடந்த மற்றும் தற்பேததைய அரசாங்கத்திடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம்.

ஆனால் அந்த வியடங்கள் குறித்து அரசாங்கம் கவனம் செலத்தியதாக தெரியவில்லை.

வீசிங்கை மீள செலுத்த முடியாத நிலைக்கு இந்த துறைகளை சேர்ந்தோர் தள்ளப்பட்டுள்ளனர்.

அதேபோன்று டொலர் நெருக்கடியின் காரணமாக குறித்த துறைகளை சேர்ந்தோரால் மூலப்பொருட்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அதற்கு மேலதிகமாக மின்வெட்டு காரணமாகவும் இந்த துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலை தொடரும் பட்சத்தில் வேலை வாய்ப்பை இழக்கும் நிலைக்கு ஏற்படும்.

அதேபோன்று தேர்ச்சிபெற்ற இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறும் pலைமையும் ஏற்படும். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பால்மா, எரிபொருள் , எரிவாயு பிரச்சினைகளுக்கு இதுவரையில் எந்தத் தீர்வும் இல்லை. மேலும் சுற்றுலா மற்றும் கட்டட நிர்மணம் உள்ளிட்ட துறைகள் நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான துறைகள் ஆகும்.

இவ்வாறாக அனைத்து துறைகளும் வீழ்ச்சி காணும் நிலையில் பாராளுமன்றத்தில் உள்ள சிலர் அனைத்து விடயங்களக்கும் தமது கரங்களை உயர்த்தி ஆதரவுவழங்கும் நிலைமையே காணப்படுகின்றது.

உண்மைகள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை அறிந்து கொள்ளாதவர்களாக செயற்படுகின்றனர்.

அந்தவகையி;ல் உண்மைகள் குப்பைக்கூடைக்கு செல்லும் நிலை ஏற்படுகின்றது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *