நாட்டின் சில பகுதிகளில் பச்சை அரிசியின் விலை கிலோ 250 ரூபாவாகவும், முட்டை ஒன்றின் விலை 50 ரூபாவாகவும் அதிகரித்துள்ளன.
மற்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை மக்கள் வாங்கி பதுக்கி வைத்திருப்பதுடன், விற்பனையாளர்கள் பொருட்களை சீரற்ற விலையில் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நாட்களில் கிராமப்புறங்களில் உள்ள பல கடைகளில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இல்லாமல் மக்கள் திண்டாடுவதாகவும் தெரிய வருகிறது.
Be First to Comment