கொழும்பு முகத்துவாரம் பகுதியில் கடற்தொழில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் மீன்பிடி படகுக்கு தேவையான மண்ணெண்ணெயை பெற்றுத்தருமாறு கோரி இன்று (7) முகத்துவாரம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முகத்துவாரம் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்பாக பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம் காரணமாக, முகத்துவாரம், இக்பாவத்த, அளுத்மாவத்த ஆகிய பகுதிகளுக்கான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டிருந்தது.
மீன்பிடி படகுக்கு தேவையான மண்ணெண்ணெய் வழங்கப்படாததால் மீன்பிடிப்பதற்கு கடலுக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தொழிலாளர்கள் இதன்போது தெரிவித்தனர்.
Be First to Comment