யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் ஒழுங்கமைப்பில் பாலூட்டும் தாய்மார், கர்ப்பவதி பெண்களுக்கு சத்துணவு பொதிகள் மற்றும் குழந்தைகளுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு யாழ்ப்பாணம் – சாவகச்சேரி கலாசார மண்டபத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.
தென்மராட்சி பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பவதி தாய்மார்கள் 25 பேருக்கான சத்துணவுப் பொதிகள்
மற்றும் குழந்தைகளுக்கான உபகரணங்களே இதன்போது வழங்கிவைக்கப்பட்டன. 52 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹேரத்,
தென்மராட்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ்.சுதோகுமார் ஆகியோர் விருந்தினராக கலந்துகொண்டு பொருட்களை வழங்கி வைத்தனர்.
Be First to Comment