இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு ஐந்து மாதங்களில் முதல் தடவையாக அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு சொத்துக்கள் ஏப்ரல் மாதத்தில் 1,812 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த நிலையில் மே மாதத்தில் 1,920 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் 1,602 மில்லியன் டொலர்களாக இருந்த வெளிநாட்டு நாணய கையிருப்பு மே மாதத்தில் 1,805 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.
தற்போது தங்கம் கையிருப்பு 28 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
Be First to Comment