கற்பிட்டி பிரதேசத்தில் பாரம்பரியமாக இழுவை வலைத் தொழில் முறையைப் பயன்படுத்தும் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு அமைச்சரவை பத்திரத்தின் மூலம் நியாயமான தீர்வினைப் பெற்றுத் தருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிலரினால் மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கற்பிட்டி பிரதேச கடற்றொழிலாளர்கள் கடற்றொழில் அமைச்சரை சந்தித்து, தமது தரப்பு நியாயங்களை எடுத்துரைத்த நிலையில், மேற்குறித்த உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும, சிறு கடற்றொழிலாளர்களுக்கோ, இயற்கை வளங்களுக்கோ பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் மேற்கொள்ளப்படும் தீர்வு அமையும் எனவும் தெரிவித்தார்.
Be First to Comment