தொடருந்து கட்டணத்தை பேருந்து கட்டணத்தில் பாதியாகக் கொண்ட பொதுக் கொள்கையொன்றை வகுக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அதேவேளை, கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் வரை இரவு நேர கடுகதி தொடருந்தை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
எனினும், எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி செல்லும் ஒரு தொடருந்து பயணத்திற்கு மாத்திரம் 300,000 ரூபாய் வரை நட்டம் ஏற்படுவதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டினார்.
Be First to Comment