Press "Enter" to skip to content

ஐ எம் எவ் இற்கு பின்னால் சென்றாலும் டொலர் கிடைக்காது

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதியத்திற்கு (ஐ.எம்.எப்)பின்னால் செல்வதால் எதுவுமே நடக்கப்போவதில்லை. எமக்கு டொலர் கிடைக்கப்போவதுமில்லை.

எனவே எமது நட்பு நாடுகளின் உதவியை நாட வேண்டும் என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறை காரணமாக அடுத்த மூன்று வாரங்களுக்கு எம்மால் ஒன்றுமே செய்ய முடியாது என பிரதமர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நெருக்கடி நிலையில் முதலில் மக்களுக்கு உணவு வழங்க வேண்டும், அதேபோல் நாட்டுக்கு  டொலர் தேவைப்படுகின்றது, ஆனால் அதனை உடனடியாக பெற்றுக்கொள்ள முடியாது.

ஆகவே சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் ரஷ்யா ஆகிய எமது நட்பு நாடுகளிடம் இருந்து டொலரை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நாடுகள் தவிர்ந்து வேறு எந்தவொரு நாட்டில் இருந்து எமக்கு நிதி உதவிகள் கிடைக்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றாலும் எமக்கு டொலர் கிடைக்கப்போவதில்லை. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதியத்திற்கு பின்னால் செல்வதால் எதுவுமே கிடைக்கப்போவதில்லை என உறுதியாக என்னால் கூற முடியும்.

எனவே நட்பு நாடுகளிடம் மட்டுமே எம்மால் உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும். அதற்காக விசேட பிரதிநிதிகள் குழுக்களை அந்தந்த நாடுகளுக்கு அனுப்ப வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *