கனடாவில் வசித்து வரும் இலங்கை தமிழர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை தமிழர் மாயம்
தம்பிராஜா ஸ்ரீபதிராஜா (Thambirajah Sripathirajah) என்ற 87 வயதான முதியவரே காணாமல்போயுள்ளதாக தெரியவருகிறது.
பொலிஸாரின் தகவலின் படி குறித்த நபர் ஜூன் 7ஆம் திகதி மாலை 6.20 மணிக்கு Birchmount Rd & Bertrand அவென்யூ பகுதியில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல்போன போது அணிந்திருந்த உடை
அத்துடன் காணாமல்போன நபர் 5 அடி 7 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும், அவர் காணாமல்போன போது சாம்பல் நிற உடை அணிந்திருந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காணாமல்போயுள்ள குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் தம்மை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Be First to Comment