வடக்கிலே காற்றலை மின்னுற்பத்தித் திட்டத்தை முன்னெடுக்குபோது, அதன்மூலம் ஏற்படும் இலாபத்தின் ஒரு பகுதியை, அந்தப் பகுதிகளின் அபிவிருத்திக்கு ஒதுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற மின்சக்தி திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றியபோது, நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேநேரம், பெருந்தோட்டத் தரிசு நிலங்களை, மக்களுக்கு வழங்க வேண்டும் என அமைச்சர் ரமேஷ் பத்திரனவிடம் எடுத்துரைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்துள்ளார்
Be First to Comment