Press "Enter" to skip to content

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவில் குடியேற முயற்சித்த 15 இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்!

20 முதல் 30 வயதுக்குட்பட்ட ஆண்களே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.

நீர்கொழும்பு வாசிகளான இவர்கள்  இன்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

19 நாட்களுக்கு முன்னர் தமது பயணத்தை ஆரம்பித்த இக்குழுவினர், பல நாட்கள் இழுவைப் படகில் பயணித்த போது அவுஸ்திரேலிய கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து அவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

அவர்கள் அவுஸ்திரேலிய விமானப்படையின் விசேட விமானத்தில்,அவுஸ்திரேலியப் படைகளின் அதிகாரிகளின் ஒரு பாரிய குழுவுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இந்தக் குழு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் பின்னர் விமானநிலையத்திலுள்ள குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் 15 பேரிடமும் வாக்குமூலங்களைப் பதிவு செய்ததன் பின்னர், அவர்களை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தவுள்ளனர்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *