கோட்டை நீதவான் முன்னிலையில் சரணடைந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளின் அடிப்படையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மேலும், அவருக்கு வௌிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.
===============================
பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ கோட்டை நீதவான் திலின கமகேவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்று சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மஹரகம பகுதியில் அமைந்துள்ள நீதவானின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்று அவர் இவ்வாறு சரணடைந்துள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.
பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை இன்று இரவு 8.00 மணிக்கு முன்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சரணடையுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
அதுவரை அவரை கைது செய்வதற்கான கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை நிறைவேற்ற வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டிருந்ததது.
இந்நிலையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ சரணடைந்துள்ளார்
Be First to Comment