மட்டக்களப்பு ஓட்டுமாவடியிலுள்ள, சிங்கர் கம்பனியில் 44 இலட்சம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில், மாவட்ட விசேட குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட அதன் முகாமையாளரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (07) உத்தரவிட்டார்.
குறித்த கம்பனியில் கடமையாற்றி வந்த முகாமையாளர் அந்த கம்பனியின் 44 இலட்சத்து 67 ஆயிரத்து 353 ரூபாவை மோசடி செய்துள்ளதாக அந்த கம்பனி உரிமையாளர் குறித்த நபருக்கு எதிராக, மாவட்ட விசேட குற்றப் புலனாய்வு பிரிவுக்கு முறைப்பாடு செய்தனர்.
இதனையடுத்து, குறித்த நபரை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, இவரை எதிர்வரும் 13 ம் திதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்
Be First to Comment