பொலிஸ் தலைமையகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டத் தரப்பினர் மீது பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகங்களை மேற்கொண்டனர்.
இதனால் பொலிஸ் தலைமையகத்துக்கு முன்பாக பதற்றமான சூழல் ஏற்பட்டது.
கடந்த மே மாதம் 09ஆம் திகதி கோட்டா கோ கம, அலரிமாளிகை என்பவற்றுக்கு முன்பாக இடம்பெற்ற வன்முறைகளுக்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி பொலிஸ் தலைமையகத்துக்கு முன்பாக சில தரப்பினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டத் தரப்பினர் பொலிஸ் தலைமையகத்துக்கு உள்நுழைய முற்பட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேற்றுவதற்காக பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம், கண்ணீர்ப்புகை பிரயோகத்தை மேற்கொண்டனர்.
கோட்டா கோ கம, அலரிமாளிகை என்பவற்றுக்கு வன்முறைகள் கட்டவிழத்துவிடப்பட்டு இன்றுடன் ஒரு மாதமாகின்ற நிலையிலேயே, இந்த தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியேற வேண்டும், தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது
Be First to Comment