இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லாமல் சென்றதால் பாடசாலை மாணவர்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக பாடசாலை மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (09) பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றதாக மாணவர்கள் மேலும் தெரிவித்தனர்.
ஹட்டன் நுவரெலியா பிரதான வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள கொட்டகலை கல்வி வலயத்திற்குட்பட்ட கொட்டகலை கேம்பிரீஜ் கல்லூரியின் மாணவர்களுக்கு பாடசாலையின் கற்றல் நடவடிக்கை நிறைவடைந்த பின் பேருந்திற்காக நீண்டநேரம் மாணவர்கள் காத்திருந்ததாகவும் அதற்கு இடையில் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து நிறுத்தாமல் மாணவர்களை நடுவீதியில் விட்டு சென்றதாக குறித்த மாணவர்கள் மேலும் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபை சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்
Be First to Comment