இந்திய அரசின் இலங்கை மக்களுக்கான உணவுப்பொருள் விநியோகம் -2ம் கட்டம் நாளை ஆரம்பமாவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்
இந்திய அரசின் உதவித்திட்டத்திட்டத்தின் கீழ் 2ஆம் கட்டமாக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு கிடைக்கப்பெறும் 450000 கிலோகிராம் அரிசி நாளை காலை 8.30 மணிக்கு யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் கிடைக்கப்பெறவுள்ளது. இவ்உதவித்திட்டமானது 11 பிரதேசசெயலக பிரிவுகளைச் சேர்ந்த 9000 குடும்பங்களுக்கு பகிந்தளிப்பதற்காக குறித்த பிரதேச செயலாளர்களிடம் கையளிக்கப்பட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
Be First to Comment