Press "Enter" to skip to content

யாழ் நகரில் திருடப்பட்ட முச்சக்கரவண்டி பருத்தித்துறையில் பொலிஸ் விசேட அணியினரால் மீட்பு!

கடந்த மே மாதம் யாழ் போதனா வைத்தியசாலையின் பின் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி திருடப்பட்ட மை தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில்

பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசேட பொலிஸ் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது யாழ் போதனா வைத்தியசாலை பின் வீதியில் திருடப்பட்ட பச்சைநிற முச்சக்கரவண்டி பருத்தித்துறை பகுதியில் பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளதோடு துன்னாலை பகுதியை சேர்ந்த ஒருவர் பருத்தித்துறை பொலிஸ் விசேட அணியிரலால் கைது செய்யப்பட்டுள்ளார்

கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் மேலும் ஒரு முச்சக்கர வண்டி பொலிசாரினாள் கைப்பற்றப்பட்டுள்ளது அந்த முச்சக்கர வண்டிக்கு இலக்கத் தகட்டை மாற்றி பாவித்த மை தெரியவந்துள்ளது கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் முற்படுத்தும் நடவடிக்கை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்,

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *