இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில் இலங்கை பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க சிங்கப்பூர் அரசாங்கம் இணங்கியுள்ளது.
தற்போது சிங்கப்பூருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர், நிதி அமைச்சர் மற்றும் கைத்தொழில் அமைச்சர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார்.
சிங்கப்பூருக்கான ஏற்றுமதியை அதிகரிப்பதற்கும், இலங்கை பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்கும் சந்தர்ப்பங்களை உருவாக்குமாறும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்படி, சுகாதாரத் துறையில் அதிகளவில் வேலைவாய்ப்பைபுகளை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Be First to Comment