ரணிலுடன் இணைந்த பிரமித்த
இலங்கை முழுவதும் கடந்த மே மாதம் 09 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீ வைத்து, அவர்களின் சொத்துக்களுக்கு அழிவை ஏற்படுத்திய சம்பவத்திற்கு ஆதரவாக இராசமாணிக்கம் சாணக்கியன் கருத்து வெளியிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றில் குற்றம் சுமத்தினார்.
இந்த கருத்து தொடர்பில் மன்னிப்பு கோருவதுடன், அதனை மீளப் பெற வேண்டும் என நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்த பிரதமர், அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.
சாணக்கியனுக்கு எச்சரிக்கை
“ஜனநாயகத்தின் முதன்மையான இடமே நாடாளுமன்றம். நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் ஜனநாயகத்திற்காக முன்நிற்கின்றோம்“
“சாணக்கியன் தெற்கில் எந்த இடத்திற்கும் வந்துசெல்ல முடியும்.வடக்கில் பிரச்சினை இருந்த காலப்பகுதியிலும் அவர் அனைத்து இடங்களுக்கும் சென்றுவந்தார். கண்டியிலுள்ள பாடசாலையில் கல்வி கற்றார்.யாரும் அவருக்கு தொந்தரவு செய்ய செல்லவில்லை”
“அவருக்கும் எமக்கும் அரசியல் ரீதியான வேறுபட்ட கருத்துக்கள் உள்ளன. .அவரின் கருத்துக்களுக்கு நாம் மதிப்பளிக்கின்றோம். எனவே எமது கருத்துகளுக்கும் மதிப்பளிக்க பழகிக்கொள்ளுமாறு நாம் கேட்டுக்கொள்கின்றோம்”
“அவ்வாறு இல்லாவிடின் இந்த சில்லு திசைமாறி ஒருநாள் அவர் தவறான நிலைப்பாட்டை எடுக்கும் போது வரும். அன்று அவருக்கும் கொழும்பிற்கு வர முடியாத நாள் உருவாகும். அவ்வாறு நடைபெறக் கூடாது என நான் பிரார்த்திக்கின்றேன்” என்று பிரமித்தி பண்டார தென்னக்கோன் தமது உரையில் குறிப்பிட்டார்.
Be First to Comment