நுவரெலியா லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, நாகசேனை சிங்கள வித்தியாலயத்திற்கு அருகில், அதாவது நாகசேனை வலகா தோட்டத்திற்கு செல்லும் வீதி ஓரத்தில், இன்று, சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் சென்ற சிலர், சிசுவின் சடலத்தை அவதானித்துள்ளனர்.
அதன் பின்னர், லிந்துலை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சடலத்தை மீட்டனர்.
எனினும், சிசு யாருடையது என, இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், சுமார் 6 மாத காலம் நிறைவடைந்த சிசுவின் சடலமே, இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட நீதவானின் விசாரணையின் பின்னர், பிரேத பரிசோதனைக்காக, சிசுவின் சடலம், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பில், லிந்துலை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
சிங்கள வித்தியாலயத்திற்கு அருகில் சிசுவின் சடலம் மீட்பு!
More from UncategorizedMore posts in Uncategorized »
- ஈபிடிபி கட்சி வேட்பாளர் அன்சாரின் வீட்டின் மீது தாக்குதல் -பொலிஸார் விசாரணை
- ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெற்ற சிறீதரன்
- வர்த்தக அமைச்சருக்கு நிவ் ரத்ன அரிசி உரிமையாளர் பதிலடி
- யாழில் 300 பவுண் தங்க நகைகளை திருடி கொழும்பில் சொகுசு வாழ்க்கை! புங்குடுதீவை சேர்ந்த நபர் ஆயுதங்கள், கைக்குண்டுடன் கைது!!
- காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்திற்கு அநுர அரசாங்கத்திலும் தீர்வு கிடைக்காது- அமலநாயகி ஆதங்கம்..!
Be First to Comment