இந்த வருடம் டிசம்பர் மாதம் வரை நாட்டில் போதியளவு அரிசி கையிருப்பில் இருப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
பற்றாக்குறையாக உள்ள அரிசியின் அளவு ஏற்கனவே வர்த்தக அமைச்சினால் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
நாட்டில் அரிசியின் வருடாந்த நுகர்வு 2.4 மில்லியன் மெட்ரிக் டன் மற்றும் வருடாந்த அரிசி உற்பத்தி 1.6 மில்லியன் மெட்ரிக் டன் ஆகும்.
இதன்படி அறுவடையானது 8 மாதங்களுக்கு மாத்திரமே போதுமானதாக இருக்கும் மேலும் 04 மாத காலத்திற்கு அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் காணப்பட்டது.
எவ்வாறாயினும், மக்கள் தற்போதைய போகத்தில் திட்டமிடப்பட்ட நிலப்பரப்பை விட அதிகளவில் விவசாயிகள் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ளனர்.
2020 ஆம் ஆண்டு முதல் பருவத்தில் 403,362 ஹெக்டேயர் பயிர்ச்செய்கை செய்யப்பட்டுள்ளதாகவும், 2021 ஆம் ஆண்டு 445,000 மில்லியனாக இருந்தது எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அந்த இரண்டு ஆண்டுகளில் பயிர்ச் செய்யப்பட்ட பரப்பளவை விட, இவ்வருடம் 447,000 ஹெக்டேரில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Be First to Comment