மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இரு ஆண்கள் உயிரிழந்துள்ளதாக ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் இன்று (10) காலை இடம்பெற்றுள்ளது.
இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் வாள்வெட்டில் முடிவடைந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த 4 பேர் மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் உயிலங்குளம் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் இருவர் என்று தெரியவந்துள்ளது.
சடலங்கள் மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
Be First to Comment