யாழ்பாணத்தில் இருவேறு சம்பவங்களில்தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இரு இளம் பெண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி யாழ்ப்பாணம் மருதங்கேணி உடுத்துறை பகுதியை பிரபாகரன் பிரேமலதா (43) என்பவர் கடந்த 8ஆம் திகதி தீ காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அன்றைய தினமே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதேவேளை யாழ்ப்பாணம் உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயாரான சுதாகரன் துளசிகா (28) என்பவர் கடந்த 6ஆம் திகதி தீ காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், 8ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது
Be First to Comment