Press "Enter" to skip to content

கலையரசிக்கு இந்துக் கல்லூரி உதவி

இந்துக்களின் போர் துடுப்பாட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் அண்மையில் இலங்கை தேசிய அணியில் (19 வயது பிரிவு) இடம்பெற்ற கிளிநொச்சி வீராங்கனையான சதாசிவம் கலையரசிக்கு 2 இலட்சம் ரூபாய் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி – கொழும்பு இந்துக் கல்லூரி அணிகள் மோதும் இந்துக்களின் போர் இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இதன் ஆரம்ப நிகழ்விலேயே கிளிநொச்சி தெரேஷா கல்லூரி மாணவியான கலையரசிக்கு யாழ். இந்து கல்லூரியின் பழைய மாணவரால் வழங்கப்பட்ட 2 இலட்சம் ரூபாயை கல்லூரி அதிபர் செந்தில்மாறன் வழங்கி வைத்தார்.

மைதான வசதியின்மை – உபகரணங்கள் இன்மைக்கு மத்தியில் கடும் முயற்சியால் கலையரசி தேசிய அணிக்கு தெரிவானார். அவரைப் பாராட்டும் விதத்தில் யாழ். இந்துக் கல்லூரி முன்னெடுத்த இந்த செயல் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *