நாட்டில் சில பிக்குகள் மற்றும் கர்தினால்கள் தெரிவித்த கருத்துக்கள் காலி முகத்திடல் போராட்ட தளத்தில் தாக்குதலை மேற்கொள்ள வழி வகுத்ததாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று நாடாளுமன்றில் தெரிவித்த கருத்து தொடர்பிலான விசேட செய்தியாளர்கள் சந்திப்பு இன்று பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய கொழும்பு அருட்தந்தை சிறில் காமினி, அமைச்சரின் கருத்துக்களை நிராகரிப்பதாக தெரிவித்தார்.
அத்துடன், அமைச்சர் தங்கள் மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைப்பதாகவும் அருட்தந்தை சிறில் காமினி மேலும் தெரிவித்தார்
Be First to Comment