எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பாவனையாளர்களை பதிவுசெய்து கோட்டா முறையில் வாராந்தம் எரிபொருளை வழங்குவதற்கு எரிசக்தி அமைச்சு தீர்மானத்துள்ளது.
எரிபொருள் பிரச்சினையை தீர்ப்பதற்கு இதனைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்த மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, ஜூலை முதல் வாரத்திலிருந்து இந்த நடைமுறை பின்பற்றப்படும் எனவும் தெரிவித்தார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இன்று (12) வெளியிட்ட பதிவிலேயே இவ்விடயத்தை அவர் குறிப்பிட்டிருந்தார்.
24 மணி நேரமும் மின்சாரத்தை வழங்கவும் நிலையான எரிபொருள் விநியோகம் சாத்தியமாகும் வரையும் வாராந்தம் கோட்டா முறையில் எரிபொருள் விநியோகிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்
Be First to Comment