பாடசாலை நாட்களை குறைப்பதற்கான எதிர்பார்ப்பு இல்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாடு காணப்பட்டாலும் பாடசாலைக்கு வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை சிறந்த அளவில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் நெருக்கடியுடன் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு மத்தியில் ஆசிரியர்களையும், மாணவர்களையும் இரண்டு பிரிவுகளாக பிரித்து, வாரத்துக்கு தலா மூன்று தினங்கள் பாடசாலைக்கு அழைப்பதற்கு, அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்க ஒன்றியம் கல்வி அமைச்சிடம் யோசனை முன்வைத்திருந்தது.
இந்த விடயம் குறித்து எமது செய்தி சேவைக்கு கருத்துரைத்த போதே கல்வி அமைச்சர் இதனைத் குறிப்பிட்டார்.
எனினும், தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு பாடசாலை மாணவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
Be First to Comment