Press "Enter" to skip to content

பேஸ்புக் ஊடாக நட்பு, ஹோட்டலுக்கு அழைத்து மது விருந்து, வெளிநாட்டிலிருந்து வந்தவரிடம் நகைகள் மற்றும் காரை சுருட்டிக்கொண்டு தப்பி ஓடிய பெண்..!

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய ஒருவருக்கு மதுபானத்தை அருந்தக் கொடுத்த பெண் ஒருவர் சுமார் 27 லட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளார்.

இந்நிலையில் குறித்த பெண் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. குறித்த பெண் நேற்றுமுன்தினம் திஸ்ஸமஹாராமவில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு

முகநூல் ஊடாக நட்பாக பழகிய நபர் ஒருவருடன் வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது குறித்த நபருக்கு மதுபானத்தை அருந்தக் கொடுத்து 15 பவுண் நிறையுடைய 27,50,000 ரூபா பெறுமதியான தங்க நகைகளை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார்.

குறித்த பெண் அந்நபர் கொண்டு வந்த காரையும் எடுத்துச் சென்றுள்ளதுடன் அதை திஸ்ஸவாவிக்கு அருகில் நிறுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இதன்போது 40 வயதான ஏமாற்றப்பட்ட குறித்த நபர் கொரியாவில் பணிபுரிந்து விட்டு மூன்று நாட்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *