இலங்கை ரயில்வே திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகள் மிகக் குறைந்த வரி அடிப்படையில் ஒரு வருட காலத்திற்கு விவசாய சங்கங்களுக்கு குத்தகைக்கு விடப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரச அதிகாரிகளுடனான சந்திப்பின் போது இந்த திட்டம்குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது .
ரயில்வே துறைக்கு சொந்தமான ஒதுக்கப்பட்ட நிலங்களை ஒரு வருட காலத்திற்கு உணவுப் பயிர்ச் செய்கைக்கு குத்தகைக்கு விடப்படவுள்ளன
ஜனாதிபதி ராஜபக்ஷ கடந்த பருவத்தில் இரசாயன உரங்களை தடை செய்ததையடுத்து, இந்த ஆண்டு உற்பத்தி குறைந்துள்ளதால் இலங்கை உணவு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது .
மேலும் பணவீக்கம் காரணமாக உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன
ஆகஸ்ட் மாதம் முதல் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். உணவு நெருக்கடியைத் தடுக்க உலக உணவுத் திட்டத்தின் உதவியைப் பெறுவது குறித்தும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உணவுப் பற்றாக்குறையைத் தடுப்பதற்காகக் கிடைக்கும் அனைத்து நிலங்களிலும் பயிர்கள் மற்றும் வீட்டுத் தோட்டம் பயிரிட மக்களை ஊக்குவிக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Be First to Comment