தற்போதைய பொருளாதார நெருக்கடியில் விலைவாசிகள் உயர்ந்து வருவதால் மதுபானங்களுக்கு மாற்றாக கஞ்சா கலந்த பாலுணர்வை தூண்டும் போதைப்பொருளை இளைஞர்கள் பயன்படுத்துவது ஆபத்தான போக்காக மாறி வருவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூத்த போராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார் .
‘மதன மோதக’ எனும் இந்த மலிவு போதைப்பொருளை உட்கொள்ளும் போக்கு இளைஞர்கள் மத்தியில் வளர்ந்து வருவதாகவும் கடந்த சில மாதங்களாக பல மடங்கு அதிகரித்து வரும் மதுபானங்களின் விலையேற்றம் காரணமாக இளைஞர்கள், குறிப்பாக உயர்தர மாணவர்கள், இளைஞர்கள் மதுபானங்களுக்கு மாற்றாக இந்த போதையை பயன்படுத்துகின்றனர் என்று சமீபத்திய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளதாகவும் பேராசிரியர் கூறுகிறார்.
“மதன மோதக ஒருவரின் மன நிலையை கடுமையாக பாதிக்கும், ஏனெனில் அதில் வலுவான போதை உள்ளது. அது போன்றவற்றுக்கு அடிமையாகிவிடுவது போதைப்பொருள் பாவனையாக அங்கீகரிக்கப்படலாம் மற்றும் பயன்படுத்துபவர்கள் மருத்துவ கண்காணிப்பில் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த போதைப்பொருட்கள் இளம் தலைமுறையினரை குறிவைத்து சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படுகிறது.
எனவே, பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் இந்த மதன மோதக போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதையும், பரவுவதையும் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.





Be First to Comment