கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு உட்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு சாத்தியமான வழிமுறைகளை தீவிரமாக ஆராய்ந்து வருகின்ற கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்ட இற்றைய தினமும் மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சிற்கு வருகை தந்து பல்வேறு ஆலோசனைகளில் ஈடுபட்டார்
இதேவேளை
கொழும்பு, மோதரையில் தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் படகு கட்டும் பகுதிக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று கண்காணிப்பு விஜயம் ஒன்றினை மேற்கொண்டு நிலமைகளை ஆராய்ந்தறிந்து கொண்டமை குறிப்பிடத்தகக்து.
Be First to Comment