இலங்கையில் ஒரு நாள் சேவையின் கீழ் நாளாந்தம் வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையை இன்றுமுதல் அதிகரிக்க குடிவரவு குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த சேவையின் கீழ் தினசரி இதுவரையில் அதிகபட்சமாக நாள் ஒன்று 2,000 கடவுச்சீட்டுகள் மாத்திரமே வழங்கப்பட்டு வருகின்றன. எனினும், இன்று முதல் இந்த எண்ணிக்கையை 3,500 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி இன்று முதல் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் நாளொன்றுக்கு இரண்டு முறை நியமிக்கப்பட்டு பணிக்கு அழைக்கப்படுவார்கள்.
அதற்கமைய, காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் சேவையாற்றி வேறு அலுவலகங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட அனுபவமிக்க அதிகாரிகளை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தை தற்காலிகமாக 03 மாத காலத்திற்கு மீள் அழைக்குமாறு பொது நிர்வாக அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Be First to Comment