வியாபாரிகள் மற்றும் இடைத்தரகர்களிடம் இருந்து மறைத்து வைக்கப்பட்டுள்ள நெல் கையிருப்பு சந்தைக்கு விடுவிக்கப்படும் வரை அரிசியின் விலையைக் கட்டுப்படுத்த முடியாது என சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் 40,000 மெற்றிக் தொன் நெல் இருந்த போதிலும், பொலன்னறுவை பிரதேசத்திலுள்ள பாரிய ஆலை உரிமையாளர் ஒருவரிடம் 70,000 மெற்றிக் தொன் நெல் இருப்பதாக அச்சங்கத்தின் தலைவர் யு.கே. சேமசிங்க சுட்டிக்காட்டுகிறார்.
அதாவது, நெல் சந்தைப்படுத்தல் சபையை விட தனிநபர் ஒருவர் அதிகளவு வைத்திருப்பதாகவும், அந்த நெல் இருப்புகள் மறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
நாட்டில் அரிசி நெருக்கடி நிலவும் போது நெல் இருப்புகளை மறைத்து வைப்பது தவறு எனவும் இது போன்ற பலர் பொலன்னறுவை பிரதேசத்தில் பெருமளவான நெல் கையிருப்புகளை மறைத்து வைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
Be First to Comment